Colombo (News 1st) உலக வாழ் இந்துக்கள் தீபாவளி பண்டிகையை இன்று(20) கொண்டாடுகின்றனர்.தீபாவளிப் பண்டிகை ஐப்பசி மாதம் அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தி அன்று கொண்டாப்படுகின்றது.காத்தற் கடவுளான மஹாவிஷ்ணு அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக யுகங்கள் தோறும் அவதார புருஷராக பூமியில் ஜனித்ததாக வரலாறு கூறுகின்றது.துவாபரயுகத்தில் கொடுங்கோலோச்சிய கம்சன், நரகாசுரன் உள்ளிட்ட அசுரர்களை வதம் செய்வதற்காக பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன் ஆயர் குடியில் க...