ABU 63ஆவது பொதுச் சபை மாநாட்டின் 2ஆம் நாள்

ABU 63ஆவது பொதுச் சபை மாநாட்டின் 2ஆம் நாள் இன்று..

by Staff Writer 31-10-2026 | 6:17 PM

COLOMBO (News 1st)  ABU எனப்படும் ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் 63ஆவது பொதுச் சபை மாநாட்டுடன் இணைந்ததாக நடைபெறும் தொழினுட்ப மற்றும் நிபுணத்துவக் குழுக்களின் கலந்துரையாடல்கள் இன்றும் நடைபெறவுள்ளன.

COLOMBO CINNAMON LIFE AT CITY OF DREAMS ஹோட்டலில் இந்த கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.

பிராந்திய ஒளிபரப்பு ஊடகங்களின் எதிர்காலப் பயணம் தொடர்பான கொள்கைத் தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்படவுள்ளன.

மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை COLOMBO CINNAMON LIFE AT CITY OF DREAMS வளாகத்தில் நடைபெறவுள்ளதுடன், இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் நாளை மறுதினம் பிராந்தியத்தின் முன்னணி கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

ABU எனப்படும் ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் 63 ஆவது பொதுச் சபை மாநாட்டுடன் இணைந்ததாக நடைபெறும் தொழினுட்ப மற்றும் நிபுணத்துவக் குழுக்களின் கலந்துரையாடல்கள் நேற்று (31)  ஆரம்பமாகின. 

இதன்போது ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் விளையாட்டுத்துறைக் குழுக் கூட்டம், நிகழ்ச்சித் தயாரிப்புக் குழுக் கூட்டம் மற்றும் தொழினுட்பக் குழுக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்கள் நடைபெற்றிருந்தன.