சர்வதேச பெண் பிள்ளைகள் தினம் இன்று

சர்வதேச பெண் பிள்ளைகள் தினம் இன்று

by Staff Writer 11-10-2026 | 9:01 AM

COLOMBO (News 1st) 2011ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியதுடன் முதல் முறையாக 2021ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் திகதியன்று சர்வதேச பெண் பிள்ளைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

பெண் பிள்ளைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல், தரமான கல்வி வழங்குதல், ஊட்டச்சத்து, சுகாதாரம், மற்றும் குழந்தை திருமணம் போன்ற சமூகத் தீமைகளை ஒழிப்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு, 'குழந்தை திருமணத்தை ஒழித்தல் - பெண் பிள்ளைகளின் உரிமைகளில் முதலீடு செய்தல்' எனும் தொனிப்பொருளின் கீழ் சர்வதேச பெண் பிள்ளைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.