.webp)
-560949.jpg)
Colombo (News 1st) மெட்ரோ பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படும் மார்க்கங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு விசேட வழிகாட்டுதல் கோவையை வெளியிட பொலிஸ் மாஅதிபர் தீர்மானித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போக்குவரத்துப் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் W.P.J. சேனாதீர இதனைத் தெரிவித்தார்.
மெட்ரோ பஸ் சேவையில் ஈடுபடும் 07 மார்க்கங்களிலும் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பிராந்தியத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் வழிக்காட்டல் கோவையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனால், போக்குவரத்து அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கோரியுள்ளார்.
அத்துடன், வீதித்தடை வாகனங்களை பரிசோதனைக்குட்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏதேனும் சதித்திட்டங்கள் தொடர்பில் சந்தேகம் நிலவுமாயின் அது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் மெட்ரோ பஸ் சேவையில் ஈடுபடும் 07 மார்க்கங்களிலும் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பிராந்தியத்திற்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுவதாக போக்குவரத்துப் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் W.P.J. சேனாதீர வலியுறுத்தியுள்ளார்.
