நல்லூரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் கொலை

நல்லூரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் கொலை

by Staff Writer 06-10-2026 | 6:50 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணம் - நல்லூரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபர் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த பெண் தனது பிள்ளை மற்றும் தாயுடன் வீட்டில் இருந்தபோது, வீட்டிற்குள் நுழைந்த சந்தேகநபர் பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்துள்ளார்.

தாக்குதலை தடுக்க முயற்சித்த பெண்ணின் தாயாரும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒரு பிள்ளையின் தாயாகிய 32 வயதான யாழ்ப்பாணத்தின் பிரபல சமையல் கலை நிபுணர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர், காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.