ஷிரந்தி ராஜபக்ஸ முன்பிணை கோரிக்கை

தம்மை கைது செய்யாதிருக்க கோரி ஷிரந்தி ராஜபக்ஸ முன்பிணை கோரிக்கை

by Staff Writer 05-10-2026 | 6:37 PM

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஸ சார்பில் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஷிரந்தி ராஜபக்ஸ சிகிச்சைகளின் பின் மீண்டும் நாடு திரும்பும் போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக முன்பிணை கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, எந்தவொரு நிபந்தனையின் அடிப்படையிலேனும் தம்மை பிணையில் விடுவிக்குமாறு அவர் முன்பிணை மனு ஊடாக கோரியுள்ளார்.

முறைப்பாட்டின் பிரதிவாதியாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிக்குற்ற விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பெயரிடப்பட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த ஷிரந்தி ராஜபக்ஸ, மேலதிக சிகிச்சைகளுக்காக கடந்த 16ஆம் திகதி சிங்கப்பூருக்கு பயணமானார்.

கடந்த 24ஆம் திகதி நிதிக்குற்ற விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு சென்றிருந்தார்.

ஷிரந்தி ராஜபக்ஸ தலைமையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வந்த 'சிரிலிய சவிய' அமைப்பின் கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் தற்போது இடம்பெற்று வரும் விரிவான விசாரணைகளுக்கமையவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்