புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு

பயங்கரவாத தடுப்பு சட்ட வரைபு சார்பில் புதிய சட்டமூலம்

by Nadeeshan Meedin 23-09-2026 | 12:04 PM

Colombo (News 1st) பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காகவே இந்த புதிய சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் உத்தரவின் பேரில் இது வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.