.webp)
-560352.jpg)
COLOMBO (News 1st) 2026ஆம் ஆண்டிற்கான WORLD ULTIMATE மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஸ் தரங்க வெற்றி பெற்றுள்ளார்.
ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெற்ற போட்டியில் 91.09 மீட்டர் தூரத்தில் ஈட்டியை எறிந்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உலக இறுதி மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், ஜெர்மனியின் ஜூலியன் வெபர் போன்ற ஒலிம்பிக் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களும் ருமேஷின் போட்டியாளர்களாக இடம்பிடித்தனர்.
ருமேஷ் தரங்க ஈட்டி எறிதல் ஆடவர் பிரிவில் உலகத் தரவரிசையில் முன்னணியில் உள்ளார்.
இவ்வருடத்தின் பொதுநலவாய விளையாட்டு விழாவின் ஈட்டி எறிதல் ஆடவர் பிரிவின் தங்கப் பதக்கம் பெற்றதுடன் ஒஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் போட்டியிலும் தங்கப் பதக்கத்தை பெற்றிருந்தார்.
டயமண்ட் லீக் தொடரின் முதல் 04 போட்டிகளிலும் வெற்றி வெற்ற ருமேஷ், Rome தொடரில் 92 புள்ளி 62 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்து கைப்பற்றினார்.
இது ஈட்டி எறிதல் ஆடவர் பிரிவிற்கு இந்த ஆண்டில் வீரரொருவர் வெளிப்படுத்திய சிறந்த திறமையுமாகும்.
