.webp)
-559550.jpg)
COLOMBO (News 1st) மொனராகலை - ஹம்பேகமுவ பகுதியில் அதிகளவு கஞ்சாவுடன் சந்கேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹம்பேகமுவ பொலிஸாரால் நேற்று (24) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரொருவர் வழங்கிய தகவலுக்கமையவே ஹம்பேகமுவ பகுதியில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடமிருந்து 290 கிலோ 50 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
