நயினாதீவு படகு விபத்து-10 பேரும் வைத்தியசாலையில்..

நயினாதீவு படகு விபத்து : மீட்கப்பட்டவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி

by Staff Writer 17-08-2026 | 8:10 AM

Colombo (News 1st)  யாழ்ப்பாணம் - நயினாதீவிற்கருகில் நேற்று(16) படகு விபத்திற்குள்ளானதில் மீட்கப்பட்ட 10 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


​விபத்திற்குள்ளான அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதாக யாழ்ப்பாண வைத்தியசாலையின்  பணிப்பாளர், டொக்டர் த.சத்தியமூர்த்தி நியூஸ் ஃபெஃஸ்ட்க்கு தெரிவித்தார்.


குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகே நேற்று மாலை நயினாதீவிற்கருகில் விபத்திற்குள்ளானது.


படகில் 08 பயணிகளும் 2 படகோட்டிகளும் இருந்ததாக கடற்படை பேச்சாளர், கொமாண்டர் சமிந்த வலாகுளுகே தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்