மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டி சோலங்கந்தையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 03-08-2026 | 10:09 AM

Colombo (News 1st) நாவலப்பிட்டி - சோலங்கந்தை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வர்த்தக நிலையமொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் நாவலப்பிட்டி குருந்துவத்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.