போதைப்பொருள் கடத்தல் : உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது

by Staff Writer 29-07-2026 | 6:15 PM

Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ.வூட்லர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் 3 வருட சேவை காலத்தை கொண்டவரெனவும் மாத்தறையை சேர்ந்தவரெனவும் தெரியவந்துள்ளது.

அவர் பழகிய நபர்கள் தொடர்பில் ஆராய்ந்த போதே குறித்த உப பொலிஸ் இன்ஸ்பெக்டர்  போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.