.webp)
-557944.jpg)
Colombo (News 1st) கொழும்பு துறைமுக நகரிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சீன பிரஜையின் துப்பாக்கியும் கையடக்கத் தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொழும்பு துறைமுக நகரிலில் குறித்த நபர் மீன்பிடித்து கொண்டிருந்த கடற்பரப்பிலிருந்து அவை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 22ஆம் திகதி இரவு கொழும்பு துறைமுக நகரிலுள்ள பாலத்தில் 03 சீனப் பிரஜைகள் மீன்பிடித்து கொண்டிருந்த போது வேனில் வந்த மற்றுமொரு சீனப் பிரஜைகள் குழுவினர் அவர்களைத் தாக்கி கை கால்களை கட்டி, ஒருவரைக் கடத்திச் சென்றிருந்தனர்.
பின்னர் குறித்த சீன பிரஜையின் சடலம் எஹெலியகொடை - கரதன பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
கத்தியால் குத்தியதில் உடல் உள்ளுறுப்புகளுக்கு ஏற்பட்ட சேதத்தினாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சடலத்தை சீன தூதரகத்தின் ஊடாக சீனாவிற்கு அனுப்புவதற்கான நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த ஹாவோ சொங் எனப்படும் குறித்த சீன பிரஜை கணினிக் குற்றங்களுடன் தொடர்புடையவரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 2 சீன பிரஜைகளிடம் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களும் கணினி குற்றங்களுடன் தொடர்புடைய கும்பலின் உறுப்பினர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் வழிகாட்டலின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
