தென் மாகாண தரம் 9 பரீட்சை நாளை

வினாத்தாள் அச்சிடுவதில் தாமதம் : தென் மாகாணத்தில் தரம் 09 மாணவர்களுக்கான வாராந்த பரீட்சை நாளை

by Staff Writer 22-07-2026 | 5:42 PM

Colombo (News 1st) வினாத்தாள் அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக தென் மாகாணத்தில் தரம் 09 மாணவர்களுக்கு நேற்றுமுன்தினம் (21) நடைபெறவிருந்த வாராந்த பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

புவியியல் மற்றும் சிங்கள ஊடக குடியுரிமை கல்வி ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள்களை அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

குறித்த பாடங்களுக்கான பரீட்சைகள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் நாளை நடைபெறும் என தென் மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அப்பகுதியிலுள்ள அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.