புதிய அமைச்சரவைச் செயலாளர் நியமனம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஆசிரி கருணாவர்தன

by Staff Writer 22-07-2026 | 5:37 PM

Colombo (News 1st) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி பொறியியலாளர் ஆசிரி கருணாவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

புதிய செயலாளருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் வழங்கினார். 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரி கருணாவர்தன இதற்கு முன்னர் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியுள்ளார்.