பாட்டலி சம்பிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைப்பு

பாட்டலி சம்பிக்க ரணவக்க ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைப்பு

by Staff Writer 22-07-2026 | 8:50 AM

Colombo (News 1st) நிலக்கரி கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று (22) அழைக்கப்பட்டுள்ளார்.

அவர் முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை முன்வைத்தவர்களிடம் சாட்சியங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.