78,000 கடந்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 78,125 ஆக அதிகரிப்பு

by Staff Writer 22-07-2026 | 2:06 PM

Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 78,125 ஆக அதிகரித்துள்ளது.

கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் தொடர்ந்தும் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகின்றனர். இந்த மாதத்தின் இதுவரையான 21 நாட்களுக்குள் 22,749 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த வருடத்தில் இதுவரை 56 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள 162 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

டெங்கு அதி அபாயமிக்க 63 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.