.webp)

Colombo (News 1st) முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் இன்று(21) கைது செய்யப்பட்டார்.
கடந்த 13ஆம் திகதி சீனப் பிரஜையொருவருக்கு சொந்தமான 02 கோடி ரூபா பணத்தை கொள்ளையடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களில் பிரபல தொழிலதிபர் ஒருவரின் பேரனும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
