.webp)

Colombo (News 1st) இந்தியா முதல் தடவையாக டெங்கு தடுப்பூசி பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது.
ஜப்பானின் 'Takeda' நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசி QDENGA என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியானது DENV-1, DENV-2, DENV-3 மற்றும் DENV-4 ஆகிய டெங்குவின் 4 முக்கிய திரிபுகளுக்கும் எதிராக செயற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய தடுப்பூசிகளை போன்று அல்லாமல் இதனை வழங்குவதற்கு முன்பாக ஒருவருக்கு ஏற்கனவே டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய இரத்த பரிசோதனைகள் செய்ய வேண்டிய அவசியமில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தடுப்பூசியின் செலவை குறைப்பதற்காக Takeda நிறுவனம் இந்தியாவின் 'Biological E' நிறுவனத்துடன் இணைந்து ஆண்டிற்கு 50 மில்லியன் தடுப்பூசி அளவுகளை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஒப்புதலின் மூலம் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவிற்கு பாரிய சுகாதார ஒத்துழைப்பு கிடைப்பதுடன் ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, பிரேஸில் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட 40-இற்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே இந்த QDENGA தடுப்பூசியின் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளன.
