கொடிகாமத்தில் 'சிசு செரிய' பாடசாலை பஸ் சேவை

கொடிகாமம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து 'சிசு செரிய' பாடசாலை பஸ் சேவை ஆரம்பம்

by Chandrasekaram Chandravadani 01-07-2026 | 3:44 PM

Colombo (News 1st) 'சிசு செரிய' பாடசாலை பஸ் சேவை யாழ்ப்பாணம் - கொடிகாமம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து இன்று(01) ஆரம்பிக்கப்பட்டது.

வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில் 'சிசு செரிய' பாடசாலை பஸ் சேவை இன்று ஆரம்பமானது.

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்கள், வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர், சாவகச்சேரி பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் பிரசன்னமாகியிருந்தனர்.