.webp)

Colombo (News 1st) பிரித்தானிய பிரதமர் Keir Starmer தமது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
அத்துடன், பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகுவதாக அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
லண்டனில் டவுனிங் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடக சந்திப்பில் Keir Starmer இதனை தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு அமைச்சர்கள், ஆலோசகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலை தொடர்ந்து பிரித்தானியப் பிரதமர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.
கட்சியில் Keir Starmer-க்கு எதிர்ப்புகள் வலுவடைந்துள்ள காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனின் நெருங்கிய நண்பரான Peter Mandelson பிரித்தானியாவிற்கான அமெரிக்க தூதுவராக நியமித்தமை, அவருக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பை தீவிரப்படுத்தியது.
