.webp)

Colombo (News 1st) முறையற்ற முறையில் பெற்றுக்கொள்ளப்பட்ட இராஜதந்திர கடவுச்சீட்டை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் விதிக்கப்பட்ட 02 வருட சிறைத்தண்டனை மற்றும் அபராதத்திற்கு எதிராக விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(11) நிராகரித்துள்ளது.
மேன்முறையீட்டை தாக்கல் செய்த பிரதிவாதிக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்துவதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன தீர்ப்பளித்துள்ளார்.
குறித்த குற்றச்சாட்டில் குற்றவாளியான சஷி வீரவன்சவிற்கு 2022ஆம் ஆண்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் 02 வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
குறித்த தண்டனைகளிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சஷி வீரவன்சவினால் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
