.webp)

Colombo (News 1st) தாதியர் பயிற்சிகளுக்கு மேலும் 3,000 பேரை இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
2025 - 2029 வரையான 05 ஆண்டுகளில் தாதியர் சேவைக்கு 13,600 பேரை இணைத்துக்கொள்ளும் இலக்கை பூர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2021, 2022, 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் விஞ்ஞானம் மற்றும் கணித பிரிவுகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவ, மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.health.gov.lk இல் இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்ட பின்னர், தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கான தாதியர் பயிற்சிகளை இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டின் சுகாதாரச் சேவையின் தற்போதைய தரவுகளின் பிரகாரம், அரச சுகாதார பிரிவுகளில் 43,553 தாதியர்கள் கடமை புரிகின்றனர்.
