.webp)

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸ தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(03) அனுமதி வழங்கியுள்ளது.
நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள 'சதி' எனும் குற்றச்சாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியும் என கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வலுவற்றதாக்குமாறு கோரி அவர் இந்த சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜா மற்றும் சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
