37 சீன பிரஜைகள் விளக்கமறியலில்..

சைபர் குற்றங்கள் தொடர்பில் கைதான 37 சீன பிரஜைகளும் விளக்கமறியலில்..

by Staff Writer 03-05-2026 | 6:22 PM

Colombo (News 1st) சைபர் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 37 சீன பிரஜைகளும் எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வலான ஊழல் தடுப்பு பிரிவினர் தலங்கம பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடவுச்சீட்டு அற்ற சந்தேகநபரும் விசா இன்றிய இருவரும் அதில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மற்றுமொரு சந்தேகநபரிடமிருந்து 2100 சிகரெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், 38 கணினிகள், 194 கையடக்கத்தொலைபேசிகள், 34 டெப்கள் மற்றும் 100 சிம் அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டதாகவும் 
சந்தேகநபர்கள் தங்கியிருந்த கட்டடம் மேலதிக விசாரணைகளுக்காக சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இதனிடையே, இராஜகரிய மத்திய வெலிக்கடை வீதியில் 120 வௌிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு - குடியகல்வு சட்டங்களை மீறிய மற்றும் சைபர் குற்றங்களுக்காக அவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைத்த தகவலுக்கமைய வெலிக்கடை பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களில் சீனா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 09 நாடுகளை சேர்ந்தவர்கள் அடங்குகின்றனர்.