.webp)

Colombo (News 1st) நாட்டின் ஏற்றுமதி சந்தையை பன்முகப்படுத்துவதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக விசேட நிதியுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏற்றுமதி செயன்முறையை கண்காணிப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் விசேட பிரதிநிதிகள் குழு நாட்டிற்கு வருகை தந்து மேற்கொண்ட கலந்துரையாடலின் போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களிலும் ஏற்றுமதி செயன்முறையை வலுப்படுத்துவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி பங்களிப்பதற்கு இணங்கியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கல விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
