.webp)

Colombo (News 1st) அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை தகவல் தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்தி முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் நிறுவனத் தலைவர்களுக்கு சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆலோக்க பண்டாரவின் கையொப்பத்துடன் இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போதும் ஊழியர்கள் சேவைகளை வழங்கும் போதும் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு இதன்மூலம் தீர்வு கிடைக்கும் என அந்த அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழி கலந்துரையாடல்கள், தொலைதூர வேலைத்திட்டங்களுக்கான மின்னணு கையொப்பங்கள் மற்றும் ஆவணப் பயன்பாடு, ஆவணப் பரிமாற்றத்திற்காக மின்னஞ்சல் மற்றும் Whatsapp போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல அறிவுறுத்தல்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு இது தொடர்பாக வெளியிட்ட வழிகாட்டல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
