.webp)
-614555-555444.jpg)
Colombo (News 1st) சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கம்மெத்தவால் முன்னெடுக்கப்பட்ட களு கங் புரவர சிறி எனும் தொனிப்பொருளிலான சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் இன்றைய(18) நாள் முழுவதும் களுத்துறையில் நடைபெற்றது.
களுத்துறை போம்புவல வில்லியம் கொடெல்லவத்த மைதானத்தில் இன்று காலை முதல் களு கங் புரவர சிறி புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
சைக்கிளோட்டப் போட்டிகள், மரதன் ஓட்டம், தலையணை சண்டை மற்றும் பாடல் போட்டிகள் நடைபெற்றதுடன் புத்தாண்டு ஆணழகன் மற்றும் புத்தாண்டு அழகி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
நாள் முழுவதும் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னர் இன்றிரவு இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியில் சங்க தினெத், நீல் வர்ணகுலசூரிய மற்றும் ஹனா ஷபா உள்ளிட்ட நட்சத்திர கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
