ஒன்றோடொன்று மோதிய படகுகள் : மீனவர் பலி

மன்னார் கடலில் ஒன்றோடொன்று மோதிய படகுகள் : மீனவர் பலி

by Staff Writer 15-04-2026 | 7:12 PM

Colombo (News 1st) மன்னார் - வங்காலைப்பாடு கடல் பகுதியில் இன்று(15) அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் மீனவரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இரு மீன்பிடிப் படகுகள் ஒன்றுடனொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மன்னார் கடல் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 02 மீன்பிடிப் படகுகள் ஒன்றோடொன்று மோதியுள்ளன.

விபத்தில் இரு படகுகளும் பலத்த சேதமடைந்த நிலையில் படகிலிருந்த மீனவர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டதோடு, மற்றையவர் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்