.webp)

Colombo (News 1st) நவீனமயப்படுத்தப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் மக்கள் பாவனைக்காக இன்று(08) திறந்துவைக்கப்பட்டது.
இதற்கான நிகழ்வு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தலைமையில் நடைபெற்றது.
நவீன வசதிகளுடன் மக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக மத்திய பஸ் தரிப்பிடத்தின் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
424 மில்லியன் ரூபா செலவில் விமானப்படையின் பங்களிப்புடன் மத்திய பஸ் நிலையம் புனரமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்களுக்காகவும் மத்திய பஸ் நிலையத்தில் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
வாகனம் வரும் வரை காத்திருப்பதற்கு காட்சித்திரைகள், நேர அட்டவணைகள் அனைத்தையும் காட்சிப்படுத்துவதற்கான டிஜிட்டல் திரைகள், பயணிகள் தமக்கு தேவையானவாறு ஓய்வெடுப்பதற்கான வசதிகள், உயர்தரமான கழிப்பறை வசதிகள், தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்காக தனி அறை, தனி செயற்பாட்டு அறை மற்றும் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கான தனி கவுண்டர் வசதி உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த மத்திய பஸ் நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் புனரமைப்பு பணிகள் நாளை(09) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
