.webp)

Colombo (News 1st) எதிர்காலத்தில் நடைபெறவுள்ள எந்தவொரு பரீட்சைக்கான கால அட்டவணையும் இதுவரை திருத்தப்படவில்லை என கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கான எவ்வித தேவையும் தற்போது இல்லை எனவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உரிய அதிகாரிகளுடனான பல சுற்று கலந்துரையாடல்களின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
கல்வி செயற்பாடுகளை பொருத்தவரை எந்தவொரு பாடத்திட்டத்திலும் பெரிதளவு மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை என பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
உலகளாவிய வலுசக்தி நெருக்கடிக்கு மத்தியில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கு அமைவாகவே கல்வியமைச்சு தீர்மானங்களை எடுத்துவருவதாக பிரதியமைச்சர் கூறியுள்ளார்.
எனினும், எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள எந்தவொரு பரீட்சை திகதிகளில் கூட மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி பிரதியமைச்சர் மதுர செனெவிரத்ன மேலும் தெரிவித்தார்.
