.webp)
-554632.png)
COLOMBO (News1st) நாட்டின் தெற்குகடலில் டொபிடோ தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய ஈரான் கப்பலில் இருந்த கடற்படையினரின் ஜனாஸாக்கள் ஈரானுக்கு இன்று கொண்டு செல்லப்படவுள்ளன.
மத்தல விமான நிலையத்தின் ஊடாக இந்த ஜனாஸாக்கள் கொண்டு செல்லப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.
காலி தேசிய வைத்தியசாலையின் பொறுப்பிலிருந்த ஜனாஸாக்கள் ஈரான் தூதரக அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டன.
காலி தேசிய வைத்தியசாலையின் இரண்டு நடமாடும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 84 ஈரான் கடற்படையினரின் ஜனாஸாக்களை ஈரான் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி பிரதம நீதவான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தார்.
ஈரானுக்குச் சொந்தமான (IRIS Dena) எனும் கப்பல் கடந்த 04ஆம் திகதி நாட்டின் தென்கடற்பரப்பில் விபத்துக்குள்ளானது.
அதிலிருந்த 32 ஈரான் கடற்படையினரை இலங்கை கடற்படையினரின் தலையீட்டுடன் மீட்கப்பட்ட பின்னர் கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் மூவர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருவதாக காலி கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
ஏனையோர் சிகிச்சை பெற்ற பின்னர் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.
