.webp)

Colombo (News 1st) வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணங்கள் மற்றும் மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை மாவட்டங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டர் அளவிலான மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய விபத்துகளை குறைத்துக்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு முதல் புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரை மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
