.webp)

olombo (News 1st) -அனர்த்தங்களினால் தடைப்பட்டிருந்த சில ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - திருகோணமலை இடையிலான இரவுநேர தபால் ரயில் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளது.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் புலதிஸி நகர்சேர் கடுகதி ரயிலும்
கொழும்பு - மட்டக்களப்பு இடையிலான உதயதேவி கடுகதி ரயிலும் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் வடக்கு ரயில் மார்க்கத்தின் புனரமைப்பு பணிகளை எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான ரயில் மார்க்கத்தில் ரயில்கள் சேவைகள் இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
