.webp)

Colombo (News 1st) கடுவெல - நவகமுவவில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பியகம பகுதியில் வைத்து நேற்று (16) சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தை திட்டமிட்டமை மற்றும் அதற்கான உதவிகளை வழங்கிய ஒருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர்
பொரளையைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த முதலாம் திகதி நவகமுவ பகுதியில் வீடொன்றிலிருந்த மூவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துடன் மற்றைய இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். துபாயில் வசித்து வரும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியொருவரின் வழிநடத்தலில் குறித்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் வௌிகொணரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
