.webp)

Colombo (News 1st) -பாதாள குழுக்களுக்கிடையிலான முரண்பாட்டின் காரணமாகவே கொழும்பு ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக 3 குழுக்களினூடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கொழும்பு ஜிந்துப்பிட்டியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் கொழும்பு 13 ஐ சேர்ந்த 44 வயதான ஆராச்சிகே ஜேசு நசர் என்பவரே உயிரிழந்தார்.
உயிரிழந்த நபரின் 4 வயது மகனும் அவரது சகோதரியின் 3 வயது மகளும் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தனர்.
காயமடைந்த இருவரும் கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த அடையாளம் தெரியாத 2 பேர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிதாரி அடையாளத்தை மறைக்கும் வகையில் ஆடையணிந்து வருகை தந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
ரிவோல்வர் துப்பாக்கி ஒன்றை பயன்படுத்தியே துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
