.webp)
-552925.jpg)
Colombo (News 1st) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளித்தரப்பினரால் ஊடுருவப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரத்னவினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சின் இணையத்தளத்தின் முகப்பு பகுதியிலுள்ள அரச இலட்சினையில் தௌிவின்மை இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் பல்வேறு சந்தர்ப்பங்களில் வௌித்தரப்பினரால் ஊடுருவப்பட்டுள்ளதுடன், இதனை வழமைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கை கணினி அவசர பதில் பிரிவு மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகம் ஆகியன இணைந்து இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
இலங்கை கணினி அவசர பதில் பிரிவு மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் செயலாளரால் வழங்கப்பட்ட முறைபாட்டுக்கமைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
