இந்திய-இலங்கை விளையாட்டரங்கு: ஒப்பந்தம் கைச்சாத்து

இந்திய - இலங்கை விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

by Staff Writer 08-01-2026 | 1:22 PM

Colombo (News 1st) இராணுவப் போர் கல்லூரியில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்திய - இலங்கை விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று(07) இடம்பெற்றது.

இலங்கை இராணுவ தலைமையகத்தின் பல்நோக்கு மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ மற்றும் இந்திய இராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இந்திய இராணுவ தளபதி, 20 மஹிந்திரா ஸ்கோர்பியோ வாகனங்கள், பயிற்சி சிமுலேட்டர்கள் மற்றும் 02 அம்பியூலன்ஸ்களை இலங்கை இராணுவத்திடம் உத்தியோகபூவமாக வழங்கி வைத்தார்.

இருநாடுகளின் இராணுவ தளபதிகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவை பிரதிபலிப்பதாக இந்த நடவடிக்கை அமைந்தது.

பின்னர் இந்திய இராணுவ தளபதி பாதுகாப்பு சேவைகள் மற்றும் பணியாளர் கல்லூரியை பார்வையிட்டார்.

இதன்போது கல்லூரி நூலகத்தின் இந்திய - இலங்கை நட்புறவு பிரிவு திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வின் பொது இந்திய இராணுவ தளபதி கல்லூரியின் பீடாதிபதி மற்றும் பயிற்றுவிப்பாளர்களுடனான சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

பாதுகாப்பு சேவைகள் மற்றும் பணியாளர் கல்லூரிக்கு ஒரு அம்பியூலன்ஸ் வாகனமும் அன்பளிப்பு செய்யப்பட்டது.