.webp)

Colombo(News 1st) நாட்டில் அடுத்துவரும் நாட்களில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இலங்கையின் கிழக்கே வளிமண்டலத்தில் உருவாகிவரும் தளம்பல் நிலை வலுவடைந்து வருவதன் காரணமாகவே மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னெச்சரிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தில் இடைக்கிடை மழை பெய்யக்கூடும் என்பதுடன்
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 02 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் நிலவுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைககளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
