அம்பத்தலை நீர் விநியோக கட்டமைப்பில் கோளாறு

இன்று நள்ளிரவுக்கு முன்பு நீர் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர முயற்சி

by Staff Writer 03-01-2026 | 7:25 PM

Colombo (News1st) அம்பத்தலை முதல் தெஹிவளை வரை நீரை விநியோகிக்கும் பிரதான குழாய் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் காரணமாக கொழும்பை அண்மித்த புறநகர் பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.  

பத்தரமுல்ல பயிப் வீதி பகுதியிலுள்ள குழாயில் நேற்றிரவு(02) கோளாறு ஏற்பட்டதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பிரதி பொதுமுகாமையாளர் லலித் விஜேசிங்க தெரிவித்தார்.

இதன் காரணமாக, மொறட்டுவை, ராவதாவத்த, சொய்சாபுரம், இரத்மலானை, கல்கிசை, தெஹிவளை, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா மற்றும் கொலன்னாவ ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளுக்கான நீர் விநியோகத்தை இன்று நள்ளிரவிற்கு முன்னர் வழமைக்கு கொண்டு வர எதிர்பார்ப்பதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

முல்லேரியா வைத்தியசாலை உள்ளிட்ட அத்தியாவசிய இடங்களுக்கு பவுஸர்கள் ஊடாக நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.