ஆண்டின் முதலாவது விண்கல் பொழிவு இன்று

ஆண்டின் முதலாவது விண்கல் பொழிவு இன்று

by Staff Writer 03-01-2026 | 7:33 PM

Colombo(News 1st) இந்த ஆண்டின் முதலாவது விண்கல் பொழிவை பார்வையிடும் வாய்ப்பு இலங்கை மக்களுக்கு இன்றிரவு கிட்டவுள்ளது. 

பூட்ஸ் என பெயரிடப்பட்ட நட்சத்திர வகுப்பிற்கு அருகில் நிகழும் குறித்த விண்கல் பொழிவை சாதாரண கண்ணால் பார்க்க முடியுமென விண்வெளி ஆய்வாளர் கிஹான் குணசேகர தெரிவித்துள்ளார். 

அத்துடன், இதுபோன்ற ஒரு விண்கல் மழையை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் காண முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.