சிறைச்சாலையில் தொலைபேசி உபகரணங்கள்

பூஸ்ஸ அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தொலைபேசி உபகரணங்கள் கண்டுபிடிப்பு

by Chandrasekaram Chandravadani 30-12-2025 | 3:22 PM

Colombo (News 1st) பூஸ்ஸ அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் மேலும் சில தொலைபேசி உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் சிறைச்சாலை திடீர் நடவடிக்கை மற்றும் தந்திரோபாய பிரிவு அதிகாரிகள் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது கவர்கள் அகற்றப்பட்ட 02 தொலைபேசி சார்ஜர்கள், Handsfree மற்றும் Data cable ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த நாட்களிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இவ்வாறான பல்வேறு உபகரணங்கள் அதன்போது கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.