.webp)

Colombo (News 1st) இசை மனித உணர்வுகளை வெளிப்படுத்தவும் மனதிற்கு அமைதி தரவும் பயன்படும் ஒரு அற்புதமான கலை.
குறிப்பாக இளைஞர்கள் அவர்களது திறமைகளை வௌிப்படுத்த களமாக அமைகின்றது.
மரபுகளைத் தகர்த்த பாரதியின் புதுக்கவியாய் முத்தமிழையும் முனைப்பாக்கி, வீறு நடைபோடும் சக்தி தொலைக்காட்சி நடத்திய Shakthi Crown ரியாலிட்டி நிகழ்ச்சி
எமது நாட்டிலும் சர்வதேசத்திலும் உள்ள இளஞர், யுவதிகள் அவர்களது திறமைகள் மற்றும் உணர்வுகளை வௌிப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட களமாகும்.
இசை இளவரசர்கள், சக்தி சுப்பர் ஸ்டார், சக்தி ஜூனியர் சுப்பர் ஸ்டார், நிகழ்ச்சிகளின் மகத்தான வெற்றிfis தொடர்ந்து Shakthi Crown ரியாலிட்டி நிகழ்ச்சி இசைப் பிரியர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குகின்றது.
இலங்கையின் ரியாலிட்டி இசை வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய Shakthi Crown Season II மாபெரும் இறுதிப் போட்டி இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நாட்டின் எண்திசைகளில் இருந்தும் கடல் கடந்த தேசங்களில் இருந்தும் குரல் தேர்வில் கலந்துகொண்ட சுமார் 8000 போட்டியாளர்களில் அதீத திறமைகளை வௌிப்படுத்திய 06 பேர் மாபெரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
கொழும்பில் இருந்து டி.சிவானுஜன்,
யாழ்ப்பாணத்தில் இருந்து ஆர். தஷிகா,
மன்னாரில் இருந்து ஏ.இமானுவலி
முல்லைத்தீவில் இருந்து எஸ்.தர்மிதா
தலவாக்கலையில் இருந்து கே.சஞ்சய் ஆகியோர் இறுதி போட்டிக்கு முன்னேறினர்.
இம்முறை Shakthi Crown ரியாலிட்டி நிகழ்ச்சியில் மலேசியா, ஐக்கிய இராச்சியம், இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த போட்டியாளர்களும் திறமைகளை வௌிப்படுத்தியிருந்தனர்.
தமிழகத்தின் சென்னையில் இருந்து வந்த ரிதன்யா உமாரவி இறுதிப் போட்டிக்கான தனது வாய்ப்பை உறுதிப்படுத்தியிருந்தார்.
Shakthi Crown Season I மகுடத்தை சூடிய பிரணவியுடன் அட்சயா, சிட்சபேசன் மற்றும் ஜிகே ஆகியோர் Shakthi Crown வெற்றிக் கிண்ணத்தை மாபெரும் இறுதிப் போட்டி மேடைக்கு கொண்டுவந்தனர்.
மாபெரும் இறுதிப் போட்டியில் 06 போட்டியாளர்களும் தமது திறமைகளை மிகவும் சிறப்பாக வௌிப்படுத்தினர்.
இந்தியாவின் புகழ்பூத்த இசையமைப்பாளர் கலைமாமணி பரத்வாஜ், விரிவுரையாளர் கலாநிதி ஏ.ஆரூரன் இசையமைப்பாளர் சௌந்தரி டேவிட் ரொட்ரிகோ ஆகிய நடுவர்களின் வழிகாட்டுதலிலும் இசையமைப்பாளர் ஷமீல் ஜே, பாடகர்களான பிரகாஷ் கே, மிருதுஷா ஆகிய பயிற்றுவிப்பாளர்களின் நெறிப்படுத்தலிலும் போட்டியாளர்கள் தமது பாடும் திறமைகளை வௌிப்படுத்தியிருந்தனர்.
இரண்டு சுற்றுக்களில் போட்டியாளர்கள் இசை பிரியர்களுக்கு விருந்து படைத்தனர்.
இலங்கையின் நடனக்கலைக்கு நாம் புதிதாக அறிமுகப்படுத்திய ஸ்ரீபொப் சிறப்பு நடனமும் இறுதிப் போட்டியின் போது அனைவரது கவனத்தையும் தன்வசப்படுத்தியது.
இறுதிப் போட்டியிலும் சிறப்பாக பாடிய தலவாக்கலையை சேர்ந்த கே.சஞ்சய் Shakthi Crown Season II-இன் 2ஆம் இடத்தைப் பிடித்தார்.
மாபெரும் இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய யாழ்ப்பாணம் கொக்குவிலை சேர்ந்த ஆர்.தஷிகா Shakthi Crown Season II மகுடத்தை சூடினார்.
வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப்பணிப்பாளர் ஷெவான் டெனியல் வெற்றிக் கிண்ணத்தை கையளித்தார்.
சிரச ஊடக வலையமைப்பின் பிரதம நடவடிக்கை அதிகாரி யசரத் கமல்சிறி பணப்பரிசிலை வழங்கினார்.
மான்னாரைச் சேர்ந்த ஏ.இமானுவலி மூன்றாம் இடம்பிடித்தார்.
எமது இளைஞர், யுவதிகளின் திறமைகளை மற்றும் கனவுகள் மீது நம்பிக்கை கொண்ட எமது அனுசரணையாளர்களும் இறுதிப் போட்டியின் போது எம்முடன் கைகோர்த்தனர்.
Shakthi Crown என்பது ஒரு நாடாக எமது இளம் சந்ததியினரின் எதிர்காலத்திற்காக நாம் அமைத்த சர்வதேச களமாகும்.
நவீன இலங்கை தொடர்பில் கனவு காண்கின்ற எமது நாட்டின் இளைஞர், யுவதிகளுக்கு Shakthi Crown ரியாலிட்டி நிகழ்ச்சியை போன்ற மேலும் பல சர்வதேச மேடைகளை அதை்துக்கொடுக்க சக்தி - சிரச ஊடக வலையமைப்பு தயாராகவுள்ளது.
இளைஞர்களின் அர்ப்பணிப்பு மற்றும் திறமைகள் மாத்திரமே எமக்கு தேவையாகவுள்ளது.
