கண்டி வெடிகுண்டு விசாரணை பொலிஸ் கணினி பிரிவிடம்

கண்டி மாவட்ட செயலக வெடிகுண்டு விவகாரம் - விசாரணை பொலிஸ் கணினி பிரிவிடம் ஒப்படைப்பு

by Staff Writer 27-12-2025 | 8:02 PM

Colombo (News 1st) கண்டி மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

5 இடங்களில் குண்டுகள் மறைத்து  வைக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளருக்கு கிடைத்த மின்னஞ்சலுக்கு  அமைய சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக கண்டி மாவட்ட செயலாளரினால் கண்டி பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

பொலிஸ் மோப்ப நாய்கள் பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவு, இராணுவத்தின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவு உள்ளிட்ட தரப்புகள் வரவழைக்கப்பட்டு சோதனை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸர் தெரிவித்தனர்.

எனினும், சோதனைகளில் எந்தவொரு வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மின்னஞ்சல் ஊடாக குண்டு தாக்குதல் அச்சறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள்  பொலிஸ் கணினி குற்ற விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.