.webp)
-606896-552280.jpg)
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2001 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளில், கைத்துப்பாக்கியொன்றை திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவரான மாகந்துரே மதுஷ் கொடுத்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
