.webp)
-606824-552244.jpg)
Colombo (News 1st) எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவிக்கின்றார்.
தற்போது 24 கரட் தங்கம் 357,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் கூறினார்.
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு இணையாக இலங்கையில் எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்படும் என தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை குறிப்பிட்டது.
தங்கத்தின் விலை உலக சந்தையில் தற்போது வரலாற்றில் மிக உயர்ந்த பெறுமதியாக பதிவாகியுள்ளது.
உலக சந்தையில் நேற்று(25) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4479 டொலராக பதிவானது.
நத்தார் பண்டிகையின் பின்னர் இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார குறிப்பிட்டார்.
தங்கம் நீண்ட கால நோக்கில் பாதுகாப்பான முதலீடாக இருந்தாலும் குறுகிய காலத்தில் தங்கத்தின் விலை பாரிய அளவில் மாற்றமடைந்துவருவதாக அவர் கூறினார்.
சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலைமையே தற்போது தங்கதத்தின் விலை அதிகரிப்பதற்குக் காரணமெனவும் அவர் குறிப்பிட்டார்.
உலக அளவில் மத்திய வங்கிகளினால் தங்க இருப்பு அதிகரிக்கப்படுவதும் தங்கத்தின் விலை அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
