.webp)
-606812-552238.jpg)
Colombo (News 1st) தற்போது செயலிழந்து காணப்படும் சுனாமி எச்சரிக்கை கோபுரங்களை மீண்டும் செயற்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்காக இந்தியாவிடமிருந்தும் உதவிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகெட கூறினார்.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவிற்குப் பின்னர் சுனாமி ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்கு அதுதொடர்பில் அறிவிப்பற்காக நாடளாவிய ரீதியில் கரையோர பகுதிகளை அண்மித்து 77 சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் நிறுவப்பட்டன.
எனினும், அவற்றில் பல கோபுரங்கள் தற்போது செயலிழந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
