.webp)
-606872-552250.jpg)
Colombo (News 1st) நத்தார் தினத்தன்று அதிவேக வீதிகளில் 54 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானம் கிடைத்துள்ளது.
நேற்று(25) 146,000 அதிகமான வாகனங்கள் அதிவேக வீதிகளில் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நத்தார் தினத்திற்கு முதள் நாளான 24ஆம் திகதி அதிவேக வீதிகளின் வருமானம் 25 வீதத்தினால் உயர்ந்துள்ளது.
24ஆம் திகதி 61 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
சாதாரண நாளொன்றில் அதிவேக வீதிகளில் கிடைக்கும் வருமானம் 45 மில்லியன் ரூபாவாகும்.
