.webp)
-551971.jpg)
Colombo (News 1st) அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் Bondi கடற்கரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கறுப்பு உடை அணிந்திருந்த துப்பாக்கிதாரிகள் Bondi கடற்கரைக்கு செல்கின்ற சிறியதொரு பாலத்திலிருந்து துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
Bondi பூங்கா விளையாட்டு மைதானத்திலிருந்து 50 மீட்டர் தூரத்தில் குறித்த பாலம் அமைந்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் 02 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர்களில் துப்பாக்கிதாரி ஒருவரும் அடங்குவதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
