4 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாயம்

4 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

by Staff Writer 11-12-2025 | 8:17 AM

Colombo (News 1st) நிலவும் மழையுடனான வானிலையால் பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயமிக்க பகுதிகளிலுள்ள சுமார் 600-இற்கும் அதிகமானோர் பாதுகாப்பு இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

ஊவபரணகம, எல்ல, ஹாலிஎல, சொரணாதோட்ட மற்றும் மீகஹகிவுல பகுதிகளிலுள்ள மக்களே இவ்வாறு வெயேற்றப்பட்டதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவிக்ரம குறிப்பிட்டார்.

நாட்டின் 04 மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தின் பன்வில, உடபலாத, மினிபே, தும்பனே, ஹதரலியத்த, யட்டிநுவர, தெல்தோட்டை, மெததும்பர, குண்டசாலை, பஸ்பாகே, பாததும்பர, பாதஹேவாஹெட்ட ஹாரிஸ்பத்துவ, தொலுவ, பூஜாபிட்டிய, கங்கவட்ட கோரளை, அக்குரணை

கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டி, மாவனெல்லை, எட்டியாந்தோட்டை, ரம்புக்கனை, அரநாயக்க, வரக்காபொல, கலிகமுவ

மாத்தளை மாவட்டத்தின், இரத்தோட்டை, உக்குவெல, மாத்தளை, பல்லேபொல, லக்கல, பல்லேகம, யட்டவத்த, அம்பன்கங்க கோரளை, வில்கமுவ

குருணாகல் மாவட்டத்தின் ரிதிகம, மல்லவபிட்டி, மாவத்தகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.